Sunday, October 6, 2013

இந்தியர் என்கிற என்றும் இல்லாத உணர்வுடன் பல்வேறு தேசிய இனங்கள் எழுந்து நின்று ஜன கன மன அதிநாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா என்று வெள்ளைக்காரனைத்தான் போற்றிப்பாடுகின்றனர்;



ஆம்; இந்தப்பாடல் யாரைப் புகழ்கிறது? இதன் பொருள் என்ன? என்று தெரிந்தால் கூனிக்குறுகிப் போவீர்கள்;

1911 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று கல்கத்தா வந்தார் இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்; ரவீந்திரநாத் தாகூரே நேரடியாகச் சென்று வரவேற்று அவரைப் பலர் முன்னிலையில் தானே தனது வாயால் புகழ்ந்து பாடிய பாட்டுதான் இந்த ஜன கன மன என்ற பாடல்; அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது எப்படி என்று புரிகிறதா? அன்றைய காலத்தில் நைட்ஹுட் என்ற பட்டம் ஆங்கில அடிமைகளுக்கு வழங்கப்பட்டது நினைவுவருகிறதா?

இன்றைய இந்தியாவின் தேசியகீதத்தின் பொருள் பின்வருமாறு;

ஐன கன மன அதிநாயக ஜயஹே
*(மக்களின் இதயங்களில் பெருமையாக வீற்றிருக்கும் உயர்ந்த தலைவனே நீ வாழ்க)

பாரத பாக்ய விதாதா
*(பாரத நாட்டின் தலைவிதியை நீ எழுதுகிறாய்)

பஞ்சாப ஸிந்து குஜராத்த மராட்டா திராபிட உத்கல பங்கா
*((பஞ்சாப், சிந்து(பாகித்தானில் உள்ளது), குஜராத்,மகாராசுட்டிரா, திராவிடம்(தென்னிந்தியாவாம்!) உத்கல்(ஒடிசா), பங்கா(வங்காளம்) எல்லாம் சேர்ந்து))

விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா
*(விந்தியமலை இமயமலைகளில் அலைகள் பரப்பியபடி ஒடும் யமுனையும் கங்கையும்)

தப சுப நாமே ஜாகே
*(உன் புனிதப்பெயரைச் சொல்லியே துயிலெழுகின்றன)

தப சுப ஆஸிஸ மாங்கே
*(உனக்காக புனித அருள் வேண்டுகின்றன-இந்த வரி இப்பாடல் இறைவனைப் போற்றுகிறது என்று கூறும் சிலரை தோலுரிக்கிறது)

காஹே தப ஜெய காதா
*(உன் வெற்றியையே போற்றவும் பாடவும் செய்கின்றன)

ஜன கன மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா
*(மக்களின் இதயங்களின் வீற்றிருக்கும் நீயே அவர்களுக்கு நற்குணங்களைப் பகிர்த்தளித்தவனே! நீதான் பாரதத்தின் விதியை எழுதுபவன்)

இதன் பிறகு அரசனின் மணிமுடியையும் அரியணையையும் கூச்சநாச்சமேயில்லாமல் புகழும் வரிகள் நீக்கப்பட்டு
ஜெய ஹே ஜெயஹே ஜெயஜெய ஹே
என்று மன்னன் ஜார்ஜை வாழ்க வாழ்க என்று வாழ்த்தி முடிகிறது அந்தப் பாடல்.

இதுதான் இந்தியா! இந்த எளவுதான் நமது தேசியப்பாடல்! இந்த அசிங்கம்தான் தமிழர் உட்பட பல தேசிய இனங்கள் மீது நாட்டுப்பற்று என்று தலையில் உட்கார வைக்கப்பட்டுள்ளது;

இதுவாவது பரவாயில்லை;

நம் தமிழ்த்தாய் வாழ்த்திலும்
"எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளி
துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன்
இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல
வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந்
தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத்
திறம்வியந்து "
என்ற ஆரிய, திராவிடத்தை விட தமிழை உயர்த்திப் பிடிக்கும் வரிகள் நீக்கப்பட்டு நம் நெத்தியில் ஒட்டப்பட்டுள்ளது.
இதைப் படிக்கும் நீங்கள் இவ்வளவு நாள் இது தெரியாதே என்று கூறினால் எவ்வளவு முட்டாளாக்கப் பட்டுள்ளோம் என்பதை உணர்வீர்களாக.................

வாழ்க பாரத் என்னும் இந்திய ஒன்றியம்.......

-ஆதி சங்கர்

1 comment:

  1. […] இந்தியர் என்கிற என்றும் இல்லாத உணர்வ… […]

    ReplyDelete