Sunday, October 6, 2013

தமிழ் மொழியின் உரிமையை மறுக்கும் அனைத்து தனியார் பள்ளிகளின் தமிழ் விரோத போக்கிற்கு ஒரு முடிவு கட்டுவோம் .



வெளிநாட்டில் தமிழர்கள் படிக்கும் பள்ளிகளில் தமிழில் பெயர் எழுதி உள்ளனர் . ஆனால் உலகில் அதிக தமிழர்கள் வாழும் தமிழர் நாட்டில் உள்ள பள்ளிகளின் பெயர்களை தமிழில் எழுதுவதில்லை. இங்குள்ள ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள், தாங்கள் உண்மையில் ஆங்கிலேயர்கள் என்றே நினைத்துக் கொள்கின்றனர் . பிள்ளைகளிடம் தமிழில் பேசுவதும் இல்லை . பிள்ளைகள் தமிழில் பேசினால் அபராதம் வேறு. உலகிலேயே தாய் மொழி சொந்த நாட்டில் மறுக்கப்படுவது நம் தமிழர் நாட்டில் மட்டும் தான் என்பது வெக்கக்கேடு.

விரைவில் தனியார் பள்ளிகள் இயக்ககம் சென்று அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டாய தமிழ் பெயர் பலகை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்போம். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் இப்படியான பள்ளிக் கூடத்தில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கலாம். தலைமை ஆசிரியரிடம் சென்று தமிழ் பெயர் பலகை வைப்பது தமிழக அரசின் ஆணை, அதை நடைமுறைப் படுத்துங்கள் என்று வலியுறுத்தலாம். தமிழ் அமைப்புகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று உடனடியாக தமிழ் பெயர் பலகை வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை நாம் உடனே செய்தாக வேண்டும். தாய் மொழியை மதிக்காத பள்ளிகள் எப்படி மாணவர்களுக்கு உண்மையான ஒழுக்கத்தை கற்றுத் தரப் போகிறார்கள் ?

படம் உதவி: சொர்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா .

-இளையவேந்தன்

 

1 comment:

  1. […] தமிழ் மொழியின் உரிமையை மறுக்கும் அனை… […]

    ReplyDelete