Wednesday, September 18, 2013

கேராளாவில் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் பார்ப்பனர் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற “பிறப்பு ஆதிக்கம்’ ஒழிந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அமைதிப்புரட்சி நடந்து முடிந்துள்ளது...

சுதந்திரம், சமஉரிமைகளுக்கு எதிரான ஆதார் அட்டை கட்டாயமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தனிமனித விவரங்களான கண்ரேகை , விரல் ரேகைகளை பொது மக்களிடம் சேகரிப்பதோடு , அவர்களை கட்டாயப் படுத்தி அவர்களின் வங்கிக் கணக்கை ஆதார் அட்டையோடு இணைக்கிறது நடுவண் அரசு.

இவ்வாறு விடுதலை ராஜேந்திரன் அவர்கள் புளகாங்கிதத்துடனும் பெருமையுடனும் கேரளத்திற்கு நற்சன்றிதழ் வழங்கியுள்ளார்.நல்லது.அப்படியானால் எனது கேள்வி? இது தான்.
திராவிடத்தையும்.பெரியாரித்தையும் ஏற்றுக்கொள்ளாத, இந்திய தேசியத்தையும், சர்வதேசியத்தையும் மட்டுமே ஏற்றுக்கொண்ட கேரளத்தில் மட்டும் இது எப்படி சாத்தியமாயிற்று?.பெரியாரியத்தையும்,திராவிடத்தையும் ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் மட்டும் ஏன் சாத்தியமாகவில்லை.இதற்கு என்ன காரணம் என்று விடுதலை ராஜேந்திரன் விளக்குவாரா?.
தமிழ்நாட்டில் அனைத்துசாதியினரும் அர்ச்சகராக முடியாதற்கு பெரியாரியத்திற்கும்,திராவிட இயக்கங்களுக்கும் ஏற்பட்ட தோல்வி என்று எடுத்துக்கொள்ளலாமா?

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

No comments:

Post a Comment