Monday, September 30, 2013

ஈழ தேசம் எங்கள் தேசம், சோழன் கரிகாலன் ஆண்ட தேசம்



தலைவரை வெளியேற்றிய விசேட படையணி

முள்ளிவாய்கால் களமுனை இன்னும்பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டதாக பலர் நினைத்து வந்தாலும்அங்கு நிகழ்ந்தேறியவை இன்றும் விடைகாணமுடியா மர்மங்களாகவே நீடித்துவருகின்றது. அந்தமர்மங்களிற்கு ஓரளவு விடையளிப்பதாகவே இந்த தகவல் அமைந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் சண்டை மிகப்பெரும் வரலாற்றுச் சோகத்துடன்நிறைவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் களமுனைக்கு விசேடபடைப்பிரிவு ஒன்று வந்திருந்ததாகவும் அவரகள் அதிநவீன ஆயுதங்களுடன்காணப்பட்டதாகவும் அவர்களை நேரிடையாக களத்தில் கண்ட முக்கய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். விசேட படைப்பிரிவில் வந்திருந்தவர்களது கையில் அதிநவீன ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர்கள் திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்டிருந்ததாகவும்தமிழில் பேசிவந்ததாகவும் தான் சந்தித்த ஆச்சரியம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர்களது வருகை பற்றியோ அல்லது அவர்கள் பற்றியோ விடுதலைப் புலிகளின்முக்கிய தளபதிகளிற்கே தெரியாமல் இருந்ததாக கூறும் அவர் தலைவரின் நேரடித் தொடர்பில் இருந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறினார். சுமார் இருநூறிற்கும் அதிகமானவர்களை கொண்டிருந்த இந்த விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில்தான் தலைவரது பாதுகாப்பு ஏற்பாடுகள்இருந்துள்ளது. இவர்கள் எதிர்கொண்ட களத்தில் சிங்களப்படை பெரும் இழப்புகளைச் சந்தித்ததை நேரடியாக பார்த்ததாக அவர் கூறினார். தலைவரது நேரடித் தொடர்பில் வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகளே இறுதிக்கட்டத்தில் தலைவரது பாதுகாப்பிற்கு வரவழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரகளது ஏற்பாட்டில் தலைவர் பாதுகாப்பாக வெளியேறி இருக்கலாம் எனவும் தான் கருதுவதாக அவர் தெரிவித்தார். இருநூறிற்கும் அதிகமான விசேட படையணிப் போராளிகள் வெளியில்இருந்து இறுக்கமான களச்சூழல்களை ஊடறுத்து களத்திற்கு செல்லமுடிந்துள்ளதென்றால் அந்த வழியில் தலைவர் உள்ளிட்டவர்கள் வெளியேறிச்சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. சண்டைக்களம் மிக மோசமான இழப்புகளுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கையில் அந்த இக்கட்டான வேளையில் கூட களமுனை தலைவரது கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது என்பதை இந்த விசேடபடையணியின் உள்நுழைவும் வெளியேற்றமும் சுட்டிக்காட்டுகின்றது. விரைவில் மர்மங்கள் விடுபட்டு விடுதலை ஒளி பிரகாசிக்கும் சாத்தியங்கள்தென்படுகின்றது. நம்பிக்கையுடன் களமாடுங்கள் தமிழர்களே வெற்றி நிச்சயம்.உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்கள் உங்கள் உங்கள் தளங்களில் முழுமூச்சுடன்விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். நாமெல்லாம் எதிர்பார்க்கும் அதிசயம் இந்த உலகில் நிகழும் காலம்வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவிக்க முடியும்.

-விடுதலை அடங்கா தமிழன்

No comments:

Post a Comment