அதற்கும் மேல்,ஒற்றை இந்தியம் என்ற கோட்பாட்டில் ஊறிப் போனவர். அவரால் இந்தியா என்ற அரசு எந்திரம் தன்னை போலவே வஞ்சனை இன்றி, ஏமாற்றாது என்ற மிகுந்த நம்பிக்கையினை வைத்திருந்தவர். அது போலவே அன்று நடந்த குலக் கல்வி நாடகத்தில், பதவிக்கு - வெகுளியாக வந்த ஐயா காமராசர் உள்ளுறை சூது கொண்ட மனிதர்களை மலை போல் நம்பி, தனக்கு அருகில் நடந்த அரசியல் சூதிற்கு பலியானவ்ர். தெரிந்தோ தெரியாமலோ செய்கின்ற தவறெல்லாம் வருகின்ற தலை முறையினை பாதிக்கும், பாதித்தது. ஆனாலும் அவர் இந்த சமுதாயத்திற்கு தந்த கல்வியைக் கொண்டு, நாம் நம்மை உயர்த்திக்கொள்வோம்.
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
No comments:
Post a Comment