Thursday, September 26, 2013

இனி என்ன தயக்கம் . விசாரிக்க வேண்டியது பான் கீ மூன் என்னும் கயவனைத் தான் !

ImageImageImageImage

பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தiமையிலான மூவர் குழு, தனது அறிக்கையில், ஈழத்தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளை, தகுந்த ஆதாரங்களோடு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல், இதுகுறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பரிந்துரை செய்து இருந்தது.

ஆனால், அப்படிப்பட்ட விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அண்மையில் இலங்கை சென்று திரும்பிய மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, கவுன்சிலில் வாய்மொழியாகத் தந்து உள்ள அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு இருப்பதையும், நீதித்துறை முடமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

ஈழத்தமிழர் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே, அதுகுறித்து எந்த விசாரணையையும் உலக நாடுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நிரந்தரமாக ஈழத்தமிழர்களை, சிங்களவரின் அடிமை நுகத்தடியில் அழுத்துவதற்காகவே, சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு, காமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17, 18 தேதிகளில், கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன.

உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான், வடக்கு மாகாண சபைத் தேர்தலை சிங்கள அரசு நடத்தியது. கொலைகார ராஜபக்சே கட்சி வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவே, துன்பத்தில் உழலும் ஈழத்தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெருவாரியாக வாக்குகளைத் தந்து வெற்றிகளைத் தந்தனர். என்றாவது ஒருநாள் தங்களுக்கு நீதியும் விடுதலையும் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு உள்ள தமிழ் மக்கள், சிங்கள அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டவே, இந்தத் தீர்ப்பைத் தந்து உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தந்து உள்ள ஒப்புதல் வாக்குமூலம், ஐ.நா. சபையின் திட்டமிட்ட தோல்வி என்பது மட்டும் அல்ல, திட்டமிட்ட துரோகம் என்பதுதான் உண்மை ஆகும்.கடமை தவறிய ஐ.நா. அதிகாரிகளும், இந்த இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனும் இதற்குப் பொறுப்பாளி ஆவார்.

சிரியாவில், அதிபர் பசார் அல் அஸ்ஸத்தின் இராணுவம் டமாஸ்கசுக்கு அருகில் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியது என்று, ஐ.நா. மன்றத்தில் பலத்த விவாதம்; அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்Þ நாடுகள் சிரியா மீது போர் தொடுப்போம் என்று மிரட்டல்; இரசாயனக் குண்டுகளை ஒப்படைத்து விடுவேன் என்று சிரியா அதிபர் பசார் அறிவிப்பு என்பதையெல்லாம் எண்ணுகையில், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு, உலக நாடுகளின் மனசாட்சி, என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment