
வெள்ளையன் நம்மீது படையெடுத்து நம்மை அடிமைபடுதவில்லை, வெள்ளையனின் கீழ் சிப்பைகளாக தமது சொந்த இனத்தை அடிமைபடுத்த வேலைகள் செய்தவர்கள் அனைவருமே இந்தியர்களே. இக்கொடுமை வேறெங்கேனும் நடக்குமா?, இங்குநடந்தேறியது; இன்றுவரை அதே நிலை நீடிக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு?. தனது தாய்மொழியை மறந்து, ஆங்கிலத்தை தூக்கிப் பிடிக்கும் இழிபிறப்புகள் இருக்கும்வரை இந்நிலை மாறப்போவதில்லை.
அனைத்தும் உயருகிறது, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தவிர?
௧௦(10) ஏக்கர் நிலத்தை விற்று கடினமாக படித்து, ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம் அடிமையாக வேலை செய்து ௨(2) செண்டு இடம் வாங்குவதாக ஆகிவிட்டது தொழிற்கல்வி. ஆனாலும் மக்களின் மோகம் இதன்மீதிருந்து இன்னும் குறையவில்லை.
ஒரு குழந்தை பிறந்து வளர்ந்த உடனே ஆங்கில வழிக்கல்வியைத் தவிர வேரேதும் படித்தால், அல்லது அதற்க்கு பிடித்ததை செய்தால் கூட அதற்க்கு வாழ்க்கையே இல்லை என்பது போல் இந்த சமூகம் சித்தரிக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.
படிக்கவேண்டும், பட்டம் பெறவேண்டும், அடிமைகளாக எங்கேனும் வேலைக்கு செல்ல வேண்டும், இல்லையேல் அக்குழந்தைக்கு வாழ்க்கையே கிடையாது என்று நினைக்கும் பெற்றோரின் போக்கு மாற வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் தனுக்கு புடித்ததை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும், பெற்றோர்களால் ஊக்குவிக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழர் இனம் பல துறைகளில் சுயசார்பாக செயல்பட முடியும்.
பட்டமில்லயேல் வாழ்க்கையில்லை என்ற நிலை மாற வேண்டும். குழந்தைகள் தங்களைத்தான் என்றுணர பெற்றோர்களும், ஆசிரியர்களும் துணைபுரிய வேண்டுமென்பதை தங்கமீன்கள் திரைக்காவியம் மிக ஆழகாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் ராம் அவர்கள் காட்டியுள்ளார்.
மக்கள் மனதில் இப்புரட்சி விதைக்கப்படாமல் தமிழர் தேசிய விடுதலை ஒருபோது சாத்தியமில்லை.
-புவிநன்...
No comments:
Post a Comment