Tuesday, September 17, 2013

தமிழர்களே நீங்கள் தாரளமாக நல்லவர்களாக இருங்கள். மற்றவர்களுக்காக உயிரைக் கொடுங்கள். ஆனால் உயிரை விடுவதற்கு முன்னாள் உங்கள் உயிரை குடிப்பவர்கள் நாளை உங்கள் பிள்ளைகளை வீட்டு வேலைக்காரர்களாக மாற்ற மாட்டார்கள் என உறுதி செய்து கொண்டு உயிரைக் கொடுங்கள். உங்கள் மகளை அவர்கள் விபச்சார விடுதியில் விற்க மாட்டார்கள் என உறுதி செய்து கொண்டு உயிரைக் கொடுங்கள்

படம் நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது.

அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தமிழர்களுக்கு பொருந்தும். எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காமல் நாட்டிற்காக உயிரை விட்டான் தமிழன். ஆனால் பெரும்பாலும் அத்தகைய தியாகங்கள் அவன் வாழ்வுக்கும், மொழிக்குமே அவனுடைய நடவடிக்கைகள் பின்னாட்களில் பயன்படுத்தப்பட்டது வரலாறு.

இதற்கு ஒரு உதரணமாக இந்தியாவின் உண்மையான தேசத் தலைவரான நேதாஜி அமைத்த இந்திய தேசியப் படையை சொல்லலாம். இன்று இந்தியா இந்தியா என்று கூவும் எவனும் அந்தப் படையில் சேர்ந்து நம்மை போல சண்டையிட்டு உயிரைக் கொடுக்கவில்லை. ( குறிப்பாக மதுரை, தேனி, ராமநாதபுரம் , பெரியகுளம் மாவட்டங்கள் ). நாம் சண்டை இட்டது எதற்காக?. இந்தியா என்னும் ஒரு தேசத்தை கட்டமைப்பதற்காக. ஆனால் அந்த தேசம் அமைந்த பின்னர் நம்முடைய மொழியையும் , மண்ணையும் , வாழ்வையும் பாதுக்காக்கும் தேசமாக அது அமையுமா என நாம் சிந்திக்கவில்லை. அதற்கான நிபந்தனைகளை விதிக்கவில்லை. இந்தியா நேதாஜி, முத்துராமலிங்கத் தேவர் தியாகங்களை வாங்கிக் கொண்டது. ஆனால் என்ன திருப்பிக் கொடுத்தது ?. தமிழை அழித்து இந்தி மொழியை திணிக்கும் ஒரு தேசத்தை இன்று வரை நம் மீது திணிக்கிறது. நேதாஜியையும் , தேவரின் தியாகங்கள் இன்று வரை மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது.

அதன் பின்னர் பாகிஸ்தான் வங்காள மொழி பேசும் மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போது இந்தியா அவர்களுக்கு உதவி செய்ய படையை அனுப்பியது. இந்தப் படையில் தமிழர்கள் பலர் சென்று சண்டையிட்டு செத்தனர். அப்போதும் தமிழ்த் தலைவர்கள் யாரும் இதை விட கொடிய பிரச்சினை ஈழத்தில் எங்கள் சொந்தங்களுக்கு நடக்கிறது. நீங்கள் அங்கும் பிரச்சினையை சரி செய்தால் தான் நாங்கள் சண்டை இட முடியும் என நிபந்தனை விதிக்கவில்லை.

இன்று வங்காளிகள் நன்றியோடு இருக்கிறார்களா? வங்காளத்தில் இருக்கும் அத்தனை வங்காள கட்சிகளும் கட்சி பாகுபாடின்றி சிங்கள அரசின் பின்னர் அணி வகுத்து நிற்கிறார்கள். ஸ்வபன் தாஸ் குப்தா போன்ற பத்திரிக்கையாளர்கள் சிங்கள மக்கள் இந்தியாவில் இருந்து ( வங்காளம், ஒரிசா ) சென்றவர்கள். எனவே அவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்கிறார்கள். தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்தால் கூட , என்றோ வங்கத்தில் இருந்து சென்ற விஜயன் என்ற அரசன் அமைத்த அரசு தான் சிங்கள அரசு என்ற கதை இருப்பதால் , அவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்ற இன வெறி வங்காளிகளுக்கு இருக்கிறது.

இன்று எந்த பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடி உயிரக் கொடுத்தோமோ அந்த பிரிட்டிஷ் அரசின் பிரதமருக்கு கொடுக்கும் மதிப்பில் கோடியில் ஒரு பங்கு கூட தமிழர் தலைவர் யாருக்கும் இந்திய அரசு கொடுக்காது. அது யாராக இருந்தாலும் சரி. ஏனென்றால் நம்மிடம் இப்போது அதிகாரம் இல்லை. பொருளாதாரம் இல்லை. நாம் இப்போது வெறும் அடிமைகள்.

அதனால் தமிழர்களே நீங்கள் தாரளமாக நல்லவர்களாக இருங்கள்.
மற்றவர்களுக்காக உயிரைக் கொடுங்கள். ஆனால் உயிரை விடுவதற்கு முன்னாள் உங்கள் உயிரை குடிப்பவர்கள் நாளை உங்கள் பிள்ளைகளை வீட்டு வேலைக்காரர்களாக மாற்ற மாட்டார்கள் என உறுதி செய்து கொண்டு உயிரைக் கொடுங்கள். உங்கள் மகளை அவர்கள் விபச்சார விடுதியில் விற்க மாட்டார்கள் என உறுதி செய்து கொண்டு உயிரைக் கொடுங்கள்

-பிரபுகண்ணன் முத்தழகன்

No comments:

Post a Comment