Tuesday, September 17, 2013

தமிழ் மொழியின் உரிமை காக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் குதித்துள்ள இந்த வீரத் தமிழர்களை வாழ்த்துவோம்.

படம்

தமிழ் மொழியை நீதிமன்ற வழக்காடு மொழியாக்கவும், மெட்ராஸ் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றவும் தொடர்ந்து இரண்டாம் நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் சென்னையில் மூன்று தமிழர்களும் , மதுரையில் ஐந்து தமிழர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை இவர்கள் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. கைதானாலும் சிறைக்கு உள்ளும் தாங்கள் உண்ணாமல் போராட்டம் செய்வோம் என்று அறிவித்துள்ளனர் இந்த வழக்கறிஞர்கள். தமிழ் மொழியின் உரிமை காக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் குதித்துள்ள இந்த வீரத் தமிழர்களை வாழ்த்துவோம்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அங்கயற்கண்ணி, வேல்முருகன் , பகத் சிங் ஆகியோர்கள் சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு தமிழர்களாகிய அனைவரும் ஆதரவு தெரிவிப்போம். அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் நேரில் சென்றும் நம் ஆதரவை தெரிவிப்போம். அலைபேசி எண்கள் : 9884380922, 9443917588

-இளையவேந்தன்

No comments:

Post a Comment