
தமிழகத்தில் நேரடியாக இந்தி திணிப்பதில் இந்திய அரசு தோல்வியுற்றாலும் , மறைமுகமாக தமிழர்களிடைய பலமாக இந்தியை திணித்தே விட்டது இந்திய அரசு. வடநாட்டிக்கு சென்று வாழ வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை என்ற போதும் தமிழகத்தில் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற மனநிலையை திட்டமிட்டு உருவாக்கினர் இந்திய இந்தி பரப்புரை சபையினர். அதன் விளைவாக இப்போது தமிழகத்து நகர்புற தமிழர்கள் தாய் மொழியை கற்பதை விட இந்தி கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதே போன்ற ஒரு மனநிலையை இப்போது இலங்கையில் உள்ள தமிழர் பகுதியிலும் புகுத்தி வருகிறது இந்திய அரசு. இந்திய அரசின் தூதரகங்கள் அமெரிக்கா ஐரோப்பா போன்ற கண்டங்களில் இருந்தாலும் அங்கெல்லாம் இந்தியை தவிர வேறு எந்த மொழிக்கும் வகுப்பெடுக்க மாட்டார்கள் இந்திய தூதரக அதிகாரிகள். அவர்களை பொறுத்தவரை இந்தி தான் இந்தியாவின் மொழி . மற்ற மொழிகள் எல்லாம் தீண்டத் தகாத மொழிகளாகும். இப்போது தமிழீழத்திலும் இந்திய அரசு தனது இந்தித் திணிப்பு வேலையை தொடங்கி விட்டது.
--------------------------------------------------------
ஆனால் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தி வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம் . சுமார் 12 பேர்கள் ஆண், பெண், குழந்தைகள் உட்பட இந்த இந்தி வகுப்பில் சேர்ந்துள்ளனர் . இந்த ஆண்டு செப்டம்பர் இந்தி (திணிக்கும் ) நாளில் இவர்கள் அனைவரும் இந்தியை தெளிவாக கற்றும் விட்டார்களாம். இவர்கள் இந்தி மொழியில் கவிதைகள் பாடல்கள் பாடுகின்றார்கள். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த வந்தே மாதரம் பாடல் நன்றாக பாடுகிறார்கள் என்று தெரிவத்துள்ளார் மகாலிங்கம்.
ஒரே ஒரு இந்தி ஆசிரியர் வைத்து தொடங்கப்பட்டுள்ளது இந்த இந்தி வகுப்புகள். அவரும் தூரகத்தில் வேலை செய்யும் ஒருவருடைய மனைவி எனத் தெரிகிறது . இவர் தான் தமிழர்களுக்கு இந்தி சிறப்பாக கற்றுக் கொடுக்கிறார். இந்தி பாடல்கள் பாட ஆர்வம் காட்டும் தமிழர்கள் பழைய இந்திப் பாடல்களை பாடுகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்தில் குறைந்த அளவே இந்தி பாடல்களை கேட்கும் மக்கள் உள்ளனர் . இங்குள்ள தமிழர்கள் வட இந்தியாவிற்கு சென்று உயர் கல்வி கற்க விரும்புகின்றனர். அதனால் தான் இந்தி கற்க ஆர்வம் காட்டுகின்றனர் என்று தெரிவித்தார் அங்குள்ள இந்தி படிப்பவர். வட இந்தியா கல்வி நிலையங்களில் இந்திய அரசு படிப்பிற்கு உதவியும் செய்வதால் இந்தி கற்பது இவர்களுக்கு நன்மை பயக்கும் என சொல்கிறார் மகாலிங்கம்.
-இளையவேந்தன்
No comments:
Post a Comment