

அரசியல் கட்சிகள் பொதுகூடங்களை நடத்திகொண்டிருக்கின்றன; மக்கள் அனைவரும் மந்திரித்துவிட்ட பைதியக்காறர்களை போல் நின்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு நின்று கேட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லையா. தன்னிச்சையாக சிந்தித்து செயல்படும் பகுத்தறிவு இல்லாத இழிவான இனமாக நமது தமிழினம் ஆனது வேதனைக்குரியது.
தமிழர் தேசத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் ஏழைகலாக இருக்கின்றனர். இவர்களின் நிலையை உயர்த்த இதுவரை உள்ள அரசியல் கட்சிகள் என்ன செய்தன, ஒன்றுமில்லை.
இந்த அரசியல் கட்சியில் உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் நல்லது செய்ய முடியுமா என்ன???. நன்மைகளை செய்ய பணமிருந்தால் மட்டும் போதாதா??? நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருக்க வேண்டும்.
இவர்கள் பொதுக்கூட்டம் போடும் செலவில், தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிக்கலாமே?.
பொதுவுடைமை பேசும் கட்சிகள் நலிவடைதோரின் வாழ்க்கையை மேம்படுத்தலாமே?.
மக்கள் பணத்தை சொரண்டும் அடிவருடிகள் ஏன் அரசியலை விடுத்தது, உழைத்து பிழைக்க கூடாது?? வியர்வை வருமோ???
-புவிநன்.
[…] ← Previous […]
ReplyDelete