Monday, September 16, 2013

பதாகை வைக்கும் பைத்தியக்காரர்கள், எதை பற்றியும் கவலையில்லாத பொதுமக்கள், அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் அரசும் ஆதிகாரிகளும்?

இதில் ஏதேனும் ஒன்று நிறைவேறியிருக்கிறதா?படம்

இதில் ஏதேனும் இனியாவது நிறைவேறுமா?

தெருத்தெருவாக பதாகைகளை வைக்கும் ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளும், அடிவருடிகளும் இதை தவிர்த்து பல நன்மைகளை மக்களுக்காக செய்யலாம். அதற்க்கான வாய்ப்புகள் சத்தியமாக இல்லை.

இதை வேடிக்கை பார்க்கும் பொதுமக்களுக்கு அதை பற்றி இந்த கவலையும் இல்லை, ஆனால் வரிப்பணம் மட்டும் சரியாக கட்டுவார்கள்.

GST சாலையின் இருபுறதிர்க்கும் நடுவே நெடுந்தூரம் ராமதாசின் படங்களும், அவன் மகன் மற்றும் மருமகளின் படங்களும் இருந்தது. ஏன் இந்த வீண் விளம்பரம்?. சாதித் தீயை மூட்டி தான் குடும்பமே குளிர் காய வேண்டுமா என்ன?

வளர்ந்த சப்பான், சர்மன் போன்ற நாடுகளில் கூட சாதி இல்லையடா; அடிமைகளுக்கு ஏனடா சாதி வெறி?

பாதகைகள் வைக்கக்கூடாது என்று சட்டம் இருந்தும், ஏன் சட்டங்கள் கடைபிடிக்கப்படவில்லை?

சட்டத்தை பாதுகாக்கும் கைகள் கரைபட்டனவா?. அவர்கள் குடும்பப்படத்தை வீட்டில் வைத்துக்கொள்ள சொல்வதற்கு யாருக்கும் துணிவில்லையா?

நீங்கள் பதாகைகளுக்கும் இது போன்ற தனிமனித விளம்பரத்திற்கும் செலவு செய்யும் பணத்தை குறைந்தபட்சம் உங்கள் சாதி வெறிபிடித்த கூட்டத்தில் உள்ள ஏழைகளுக்கும், நலிவடைந்த குடும்பத்திர்க்குமாவது செலவிடுங்கள். உங்கள் சாதி வெறியில் அவர்கள் குடும்பமும் கொஞ்சம் குளிர் காயட்டும்.

அனைத்தையும் மறந்துவிட்டு, எப்போதும் போல் வேலைகளை நாளை செய்யுங்கள்;

அடிமைகளாய் வாழ்வதை ஏற்று ஏத்த தமிழினம் வேறு என்ன செய்யும்?

-புவிநன்...

No comments:

Post a Comment