Saturday, September 14, 2013

நாம தமிழர் தேசத்தில் தானே இருக்கிரோம், தமிழில் தானே அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்???

படம்

நாம் தமிழர் தேசத்தில் தானே இருக்கிரோம், தமிழில் தானே அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்

குறள் 140:

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

மு.வ உரை:

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

கல்தோன்றி மண்தோன்றும் முன்பே, வாளேந்தி தோல் நிமிர்த்தி முன்தோன்றிய மூத்த குடியில் பிறந்தவர்கள் நாம், தாய்மொழியாம் தமிழ் மொழியை விடுத்தது நம்மை அடிமையாக்கிய ஆங்கிலத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்?

என்ன இல்லை நமது செந்தமிழில்? உலகத்தில் வேறு இந்த நாட்டிலும் இந்த இழி நிலை இல்லை. பேசும் மொழி வேறு, சிந்திக்கும் மொழி வேறு , படிக்கும் மொழி வேறு என்று. தாய்மொழியில் கற்ப்போம், தமிழில் கற்றோருக்கு வேலையளிப்போம்.

தாய்த்தமிழை உயர்த்துவோம்...

-தமிழே உயிர்

No comments:

Post a Comment