Friday, September 20, 2013

அடிப்படை மனிதாபிமானமே பொதுவுடைமை. மனிதநேயத்தையும் தாண்டி உயிர் நேயம் என்ற கொள்கையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று நினைத்து பெருமை மட்டுமே கொள்ள முடிகிறது

படம்

பார்வையற்ற மாற்றுத்திரனாலி மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. அரசு கல்லூரிகளை தொடங்கிக்கொண்டே போகிறது. ஆனால் படிப்பவர்களுக்கு வேலையளிப்பதில்லை. அவர்களை வீதிக்கு வந்து போராட வைத்ததே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் அவர்களை கையாண்ட விதம் சட்டம் எளியவர்கள் மீது மட்டும் கடுமையாகவும், நேர்மையாகவும் பாயும் என்பதை உணர்த்துகிறது.



அவர்களை இரவில் சுடுகாட்டில் விட்டுச்சென்றது இவர்களும் மனித இனத்தை சேர்ந்தவர்கள் தானா என்ற ஐயத்தை ஏற்ப்படுத்துகிறது?



ஆங்கிலத்தில் "A FOR APPLE", "B FOR BALL" என்று கற்ப்பதயே விரும்பும் நம்மின மக்களுக்கு எப்படி மனிதநேயம் இருக்கும்.

தமிழ் "அறம் செய்ய விரும்பு"; "ஆறுவது சினம்" என்று ஒவ்வொரு எழுத்திற்கும் அறத்தை போதித்தது தமிழினம். அதை தூக்கிஎறிந்துவிட்டு ஆங்கில மோகத்தில் திறியும் அற்ப பதர்கள் அப்படி தான் இருக்கும்.

இச்செயலை செய்தவர்களையாவது அரசு கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவிநள்

No comments:

Post a Comment