Thursday, September 19, 2013

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க தமிழக அரசுக்கு அனைத்து கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை: பத்திரிக்கையாளர் சந்திப்பு. நாளை வெள்ளி 20/09/13 மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்திப்பு. ஒருங்கிணைப்பு: தமிழர் பண்பாட்டு நடுவம்.

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க தமிழக அரசுக்கு அனைத்து கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை: பத்திரிக்கையாளர் சந்திப்பு.

நாளை வெள்ளி 20/09/13 மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்திப்பு. ஒருங்கிணைப்பு: தமிழர் பண்பாட்டு நடுவம்.

படம்

சில நாட்களுக்கு முன் வடநாட்டு பாஜக எம்.பி ஒருவர் பாராளுமன்றத்தில் தமிழ் மொழியை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு வடநாட்டு மொழியான இந்தி மொழியை ஆட்சி மொழியாக தேர்ந்தெடுத்தனர். ஒரு சில மாநில மக்களின் தாய் மொழியான இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாயிற்று . இதனால் பல வழிகளில் இந்தி எல்லா மாநிலங்களிலும் திணிக்கப்பட்டது. நடுவண் அரசுத் துறைகளில் தமிழுக்கு இடமில்லாமல், இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக வைத்த காரணத்தால் தமிழர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இந்தியாவின் தொன்மையான தென்னிந்திய மொழியான தமிழுக்கும் இந்திக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் ஒரே ஒரு இந்தி மொழிக்கு மட்டும் எல்லா அதிகாரமும் வழங்கப்பட்டு வருகிறது. இதை தமிழர்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். வடநாட்டு எம்.பி யான தருண் விஜய் அவர்களுக்கு நாம் நன்றி கூறும் அதே வேளையில் தமிழக முதல்வரும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையை சட்ட மன்ற தீர்மானமாக இயற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் . இதன் மூலம் தமிழக மக்களின் நெடு நாள் கோரிக்கை நிறைவேறும். இந்த கோரிக்கைக்கு அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறோம்.

இது வரை ஆதரவு தெரிவித்த இயக்கங்கள் கட்சிகள்.
தமிழர் எழுச்சி இயக்கம்
உலகத் தமிழ் அமைப்பு
தமிழ் நாடு மாணவர் பேரவை
தமிழர் முன்னேற்ற கழகம்
உலகத் தமிழர் பேரவை
மனித நேய மக்கள் கட்சி
தமிழக வாழ்வுரிமை கட்சி
நாம் தமிழர் கட்சி

மேற்கொண்டு ஆதரவு தர விருப்பமுள்ள இயக்கங்கள் கட்சிகள் , உங்கள் ஆதரவை எங்களுக்கு விரைவில் தெரியப்படுத்துங்கள். உங்கள் கட்சி இயக்க பெயர்களை நாங்கள் இணைத்து பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடுவோம். தமிழர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் நம் நெடுநாள் மொழி உரிமைமை மீட்கலாம். தமிழ் மொழியை அரியணையில் ஏற்றலாம். தொடர்புக்கு 9566224027

-இளையவேந்தன்

No comments:

Post a Comment