Saturday, September 21, 2013

இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா தொடங்கி வைக்க பல மணி நேரம் ஒதுக்க முடிந்த முதலமைச்சரால், பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்க சில நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லை. கோடீசுவர தயாரிப்பாளர்களும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களும் பங்கேற்கும் இந்த விழாவிற்காக மக்களின் வரிப் பணம் ரூ.10 கோடியை வாரி வழங்கத் தெரிந்த முதல்வருக்கு, வாழ்க்கையைத் தேடும் பார்வையற்ற பட்டதாரிகளின் நலனுக்காக சில கோடிகள் மட்டுமே செலவாகும் கோரிக்கைகளை ஏற்க முடியவில்லை.

சரியான கேள்வி! ஒரு தாய்க்கு ஊனமுற்ற பிள்ளைகள் மேல் தான் அதிக பாசம் இருக்கும். ஒரு நாட்டின் முதல்வர் தாயாக இருந்து நாட்டு மக்களை பாதுகாத்திட வேண்டும். அதுவும் பார்வையற்ற மக்களிடம் அதிக அன்பு காட்ட வேண்டும். ஆனால் தமிழகத்தில் நடப்பது கருணை இல்லா ஆட்சி .

பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவையோ அல்லது அதிக செலவு பிடிப்பவையோ அல்ல. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களை பார்வையற்றவர்களுக்கு மட்டும் 60 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும் & மற்ற அரசு வேலைவாய்ப்புகளில் பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் & உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் ஆகியவை தான் அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவாகும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் சமூகச் சூழலுக்கு ஏற்ற வகையில் தேர்ச்சி மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திராவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணாக 35% மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதில் சட்ட சிக்கலோ அல்லது வேறு பிரச்சினையோ ஏற்படப் போவதில்லை.

அதேபோல் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் அரசுக்கு ஆண்டுக்கு சில கோடிகள் கூடுதல் செலவு ஆவதைத் தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தங்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும் என்று பார்வையற்றவர்கள் கோரி வருகின்றனர்.

ஆனால், இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா தொடங்கி வைக்க பல மணி நேரம் ஒதுக்க முடிந்த முதலமைச்சரால், பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்க சில நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லை. கோடீஸ்வர தயாரிப்பாளர்களும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களும் பங்கேற்கும் இந்த விழாவிற்காக மக்களின் வரிப் பணம் ரூ.10 கோடியை வாரி வழங்கத் தெரிந்த முதல்வருக்கு, வாழ்க்கையைத் தேடும் பார்வையற்ற பட்டதாரிகளின் நலனுக்காக சில கோடிகள் மட்டுமே செலவாகும் கோரிக்கைகளை ஏற்க முடியவில்லை.

மாறாக கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினாலே அவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்று கருதி காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாநிலை இருப்பவர்களை வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுடுகாட்டிலும், மதுராந்தகத்திலும் ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல்வது என கடத்தல்காரர்களைப் போல காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர்.

-இளையவேந்தன்

1 comment:

  1. இவளை ஏய்யா முதலமைச்சரா ஆக்குனீய அவனும் இலேசுப்பட்ட ஆள் இல்லை
    இந்த இரண்டு நாய்களையும் ச்சீ ச்சீ என்று விரட்டுங்கள் தாய் தந்தையரே

    ReplyDelete