











http://youtu.be/X17lI5xZwCA
கணினியை முழுமையாக தமிழில் பயன்படுத்த....
"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற உணர்வுடன் வாழும் அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம்"
நமது சிந்தனைகள் அனைத்தும் சிறப்பான செயல்பாடுகளாகும் என்ற நம்பிக்கையில் மற்றும் ஒரு பதிவு.
கணினி என்னும் சதணம் மக்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் நன்கு ஆரிவோம். நாம் இன்னும் பழங்கதைகள் பேசுவதால் மாற்றங்கள் நிகழ போவதும் இல்லை. நாம் வள்ளுவன் வழி நடப்போம் என்பதில் இந்த மாற்றமும் இல்லை. ஆனால் தொழில்நுட்பத்தில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் பயணம் கொல்வோம். கணினி இல்லாத துரைகள் இல்லை என்றே கூறலாம். கணினியை தமிழில் மாற்றுவதால் என்ன பயன் என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். முதலில் தமிழ் மொழி தொழில்நுட்ப பயன்பாட்டில் வர வேண்டும், பின்பு தான் நமது மொழியில் கண்டுபிடிப்புகள் நிகழும் என்பதில் இந்த ஐயமும் இல்லை.
நாம் கணினியை முழுமையாக தமிழில் பயன்படுத்த ௨ முக்கிய விடயங்களை மாற்றம் செய்ய வேண்டும்
௧. காட்சி மொழி [DISPLAY LANGUAGE]
௨. உள்ளிடும் மொழி [ INPUT LANGUAGE].
௧. இயக்கத்தளங்கள் நிறுவல்[INSTALLATION OF OPERATING SYSTEMS]. இச்செயலை செய்யும்பொழுதே தமிழ் மொழியை தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் காட்சி மொழியை முழுமையாக மாற்றிவிடும். பின்பு நீங்கள் வேண்டுமானால் திரைமேல் விசைபலகை[VIRTUAL KEYPAD] அல்லது GOOGLE INPUT TOOLS பயன்படுத்தலாம் உள்ளீடு தமிழில் தர.
௨. நீங்கள் எப்போது முன்பே WINDOWS 7 பயன்படுதுகிரிர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உள்ளீடு மொழியை மேற்கூறியவாறு மாற்றி கொள்ளலாம். பின்பு காட்சி மொழியை [DISPLAY LANGUAGE] மாற்றம் செய்ய நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும். இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் காண்க:
கட்டுபாட்டுப் பகலம் [ CONTROL PANEL]--> TIME N LANGUAGE SETTINGS--> அடுத்த கட்டமாக என்ன செய்யவேண்டும் என்பதை புகைபடத்தில் வரிசை படுத்தி உள்ளேன். WINDOWS 7 MULTI-UTILITY LANGUAGE PACK பதிவிறக்கம் [ DOWNLOAD] செய்து, உங்கள் கணினி ௩௨-பிட் [32-BIT] அல்லது ௬௪-பிட் [ 64-BIT] என்பதை கண்டுவிட்டு பின்பு நிறுவவும் [INSTALL].
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் எங்கள் தமிழ் மீது உறுதி; விழிமூடி துயில்கின்ற வீர வேங்கைகள் மீதும் உறுதி. இனிமேலும் ஓயோம்; இழிவாக வாழோம்; உறுதி.. உறுதி…
ஒன்றுபடுவோம் நாம் தமிழராய்; வென்றாக வேண்டும் தமிழ்; மீட்டெடுப்போம் தமிழர் உரிமைகளை; உறுதி; உறுதி...
உங்கள் கணினியும் தமிழ் மயமாகும் என்ற நம்பிக்கையுடன்... நன்றி..
-பூங்கோதை கனகராசு(பூ.க.) நந்தகுமார்.
No comments:
Post a Comment