Thursday, September 12, 2013

என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்? "முப்படைகளையும் கட்டி அமைத்த எமது தேசிய தலைவன் மாவீரர் தினத்தில் மட்டுமே பேசுவார்" "செயல்படுவோம்,அதுவே உண்மையான வீரம், பேசுவதல்ல"

படம்

"முப்படைகளையும் கட்டி அமைத்த எமது தேசிய தலைவன் மாவீரர் தினத்தில் மட்டுமே பேசுவார்"

"செயல்படுவோம்,அதுவே உண்மையான வீரம், பேசுவதல்ல"

ஒரு வேலையும் செய்யாமல் பேசுவதை மட்டுமே செய்து, மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர் அரசியல்வாதிகள்.

நாங்கள் நன்மைகள் செய்வோம், சமுதாய மாற்றத்தை ஏற்ப்படுத்துவோம் என்று பேசிக்கொண்டே இருக்கும் அரசியல்வாதிகளை விட, செயல்ரீதியாக நன்மைகளை செய்தவர்களே அரசியல் தலைவர்களாக வேண்டும்.

தமிழர் தேசத்தில் நடக்கும் கொடுமைகளையும், இழிநிலையையும் பார்க்கும் போது "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்" என்று பாரதி பாடியது தான் நினைவுக்கு வருகிறது.

மக்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை?.

இன்றுவரை அரசியல் கட்சிகள் அனைத்தும் பேசுவதை தவிர, செயல்ரீதியகா ஏதேனும் நன்மைகளை மக்களுக்கு செய்ததுண்டா என்று ஏன் மக்கள் சிந்திக்க மறுக்கின்றனர். தனக்கு நேரடியாக அறிமுகம் இல்லாத, யாரென்றே தெரியாத அரசியல் த'லி'வர்கள் நன்றாக பேசுகிறார்கள் என்ற ஒரே காரணதிற்காக, அதை கேட்க பெரும்திரளாக ஒன்றுகூடி விடுகின்றனர். இந்நேரத்தில் செயல்ரீதியாக தமிழ் வளர்ச்சிக்கும், சமுதாய மாற்றத்திற்க்கும் ஏதேனும் நன்மைகளை செய்யலாமே? வீணாக பேசிக்கொண்டே இருப்பவர்களை உங்கள் களத்தில் இறங்கி செயல்பட சொல்லுங்கள், அன்று தெரியும் யார் உண்மையான தலைவர்கள் என்று?

இந்த அவள நிலை வேறு எங்குமே கிடையாது. பிற நாடுகளில் செயல்ரீதியாக சாதனைகளை செய்துவிட்டு, பின்புதான் அதை பற்றி பேசுகின்றனர்; ஆனால் இங்கு மட்டும் தான் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்" என்று ஆரம்பித்து, பல கதைகளை கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் மற்ற அரசியல் கட்சிகளை குறை கூறுகின்றனர். இது இன்றல்ல, நேற்றல்ல காலம் காலமாக தொண்டுதொட்டு நடந்து வருகிறது. இந்நிலை மாற வேண்டும்; இம்மாற்றம் மக்கள் மனதில் ஏற்ப்பட்டாலன்றி வேறு வழியில்லை.

"செயல்படுவோம் எமது எமது தேசிய தலைவன் வழியில், அதுவே உண்மையான வீரம், பேசுவதல்ல"

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க...

https://www.youtube.com/my_videos?o=U

-புவிநன்

No comments:

Post a Comment