Showing posts with label விடுதலை புலிகள். Show all posts
Showing posts with label விடுதலை புலிகள். Show all posts

Monday, October 14, 2013

புலம்பெயர் தமிழரைக் குறிவைத்து தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட இருக்கின்ற மிகப் பெரிய உளவியல் யுத்தங்களை எதிர்கொள்வதற்கு உலகத் தமிழினம் தயாராக இருக்கின்றதா?

என்னிடம் யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டால், சிறிது நேரம் யோசித்துவிட்டு ‘இல்லை’ என்றுதான் பதில் கூறுவேன். ஏனென்றால், எம்மில் அனேகருக்கு இந்த உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயம் பற்றிய தெளிவு சரியாக இல்லை. நான் பேசிய பல தமிழ் ஊடகவியலாளர்கள், பல ஊடக நிறுவனங்களை நடாத்துபவர்கள், சமூகத் தலைவர்கள் இந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றிய அறிவையும், தெளிவையும் கொண்டிராதவர்களாகவே இருக்கின்றார்கள்.

இன்றைய நவீன உலகைப் பொறுத்தவரையில் psychological operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கைகளை ஊடகங்களைப் பாவித்துதான் உலகின் பெரும் சக்திகளான அமெரிக்கா முதற்கொண்டு தமிழர்களின் எதிரிகளான சிறிலங்கா இந்திய போன்ற ஒன்றியமும்  வரை மேற்கொண்டு வருகின்றன.

எனவே ஈழத் தமிழரது ஊடகங்கள் உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற விடயம் பற்றி அதிக கவனத்தை தமதாகக் கொண்டிருப்பது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

உளவியல் நடவடிக்கைகள் அல்லது உளவியல் போர் என்கின்ற விடயத்தில் பல அங்கங்கள், வகைகள் இருந்தாலும் முக்கியமான இரண்டு வகையான உளவியல் போர்கள்தாம் உலகத் தமிழரைக் குறிவைத்து தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு வகையான உளவியல் போர்கள் பற்றித்தாம் நாங்கள் தற்பொழுது அதிக அக்கறையைச் செலுத்தவேண்டிய நிலையிலும் இருந்துகொண்டிருக்கின்றோம்.

1. தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவது. (உள்ளூர் பாசையில் கூறுவதானால்: ‘தமிழர்களைப் பப்பாசி மரத்தில் ஏற்றிவிட்டு, அடி மரத்தை வெட்டிவிடுவது…’)

2. தமிழ் மக்களின் உளவியலை ஒருவித அச்ச நிலைக்குக் கொண்டு சென்று, அந்த அச்ச நிலையில் பலவிதமான தடுமாற்றங்களை அவர்களுக்கு ஏற்படுத்தி, ஒரு பலவீனமான, விரக்தியான மனநிலையில் அவர்களை வைத்திருப்பது.

இந்த இரண்டு வகையான உளவியல் நடவடிக்கைகள் பற்றித்தான் நாம் முதலில் ஆராய இருக்கின்றோம். 2006ம் ஆண்டு ஆகசுடு மாதம் 30ம் திகதி சிறிலங்காவின் அரச தலிவர் மகிந்த ராசபக்சே 3 நாட்கள் விசயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானியா வந்திருந்தார்.

அந்த நேரத்தில் செஞ்சோலைப் பாடசாலை மாணவிகள் படுகொலை, கொழும்பில் தமிழர்கள் கடத்தல், யாழ்குடாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் என்று மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர் தமிழர்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள். பிரித்தானியா வந்த மகிந்தவை பீ.பீ.சி உட்பட சர்வதேச ஊடகங்கள் செவ்வி கண்டன.

விடுதலைப் புலிகளே சமாதானத்தை முறித்து யுத்தத்தை ஆரம்பித்தாகத் தெரிவித்த மகிந்த வேறு வழியில்லாமல் தாம் பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வந்ததாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை மிகவும் கொடுரமான பயங்கரவாதிகளாக வர்ணித்த அவன், ஒரு விடயத்தை மாத்திரம் நேரடியாகவே ஒப்புக்கொண்டிருந்தான்.

அதாவது வெளிநாடுகளில், குறிப்பாக மேற்குலக நாடுகளில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை சீரமைப்பதிலும், சிறப்பானதொரு ஊடக வலையமைப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்வதிலும் அவர்கள் சிறப்பாகச் செயற்பட்டுவருகின்றதை அவன் தனது செவ்விகளில் ஒப்புக்கொண்டிருந்தான்.

புலம்பெயர் மக்களைத் திரட்டி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதிலும் புலிகள் அமைப்பின் வெளிநாட்டுப் பிரிவினர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகவும் மறைமுகமாகப் பாராட்டி இருந்தான். சர்வதேச சமூகத்தைக் குறிவைத்த பிரச்சார விடயத்தில், வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்கள் சரியாகச் செயற்படத் தவறி இருந்தன என்று குற்றம் சுமத்திய மகிந்த, இந்த விடயத்தில் வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் வலைப் பின்னல் பாரிய வெற்றி பெற்றுவருவதாகத் தெரிவித்திருந்தார்.

அடுத்த வருடமும் மகிந்த பிரித்தானியா வந்திருந்தான். பிரித்தானிய கடற்படைத் தளபதி Admiral Jonathan Band இனது அழைப்பின் பெயரில் Dartmouth இல் உள்ள Britannia Royal Naval College இல் 13.12.2007 இல் நடைபெற்ற Devon passing out parade இல் கலந்து கொள்வதற்காக மகிந்த பிரித்தானியா வந்திருந்தான். அந்த நேரத்திலும் சந்வதேச ஊடகங்கள் மத்தியில் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பிரச்சாரப் பலத்தைப் பாராட்டும் விதமாக மகிந்த கருத்துத் தெரிவித்திருந்தான்.

புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கோ இருப்புக் கொள்வில்லை. வானத்திற்கும் பூமிக்குமாகத் துள்ளிக் குதித்தார்கள் சந்தோசத்தால். எதிரியியே எங்களைப் பாராட்டும் அளவிற்கு நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்ற பெருமிதம் அவர்களுக்கு. தமது செயற்பாட்டு வெற்றியை அறிக்கைகளாக எழுதி வன்னிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் உண்மையில் மகிந்த சர்வதேச ஊடகங்களைப் பாவித்து ஒரு வகையிலான உளவியல் யுத்தத்தை நடத்திவிட்டுச் சென்றுள்ளான் என்கின்ற உண்மையை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுத்தன.

இலங்கையில் தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதாக, இன அழிப்பொன்று சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கூறுவது சாதாரண புலம்பெயர் தமிழர்கள் அல்ல. மாறாக விடுதலைப் புலிகளே அவ்வாறு பொய்யாகக் கூறுகின்றார்கள்.

மேற்குலகால் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு வெற்றிகரமாகச் செய்துவரும் பிரச்சாரம் மாத்திரமே அது என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றிருந்தான்;

மகிந்த. புலிகள் தமது திறமையான வலைப்பின்னலைப் பாவித்து சிறிலங்காவிற்கு எதிராக வெற்றிகரமாகப் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், அப்படியான பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய அளவிற்கு வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காத் தூதரங்களால் வெற்றிகரமாகச் செயற்பட முடியாமல் போயிருந்தது என்றும் மகிந்த ஒருவிதமான உளவியல் வாதத்தை முன்வைத்து விட்டுச் சென்றான்.

அதாவது புலம் பெயர் தமிழர்கள் மிகவும் சிரமப்பட்டு, மிருந்த பிரயாசைகளுடன், உணர்சிகரமாக மேற்கொண்ட அத்தனை போராட்டங்களையும், ஒரு சில வார்த்தைகளினாலேயே சுக்குநூறாக்கிவிட்டுச் சென்றிருந்தான் மகிந்த.

அந்த நேரத்தில் பல மில்லியன் டொலர்கள் செலவில் சிறிலங்கா அரசாங்கத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த வெளிநாட்டு பரப்புரை(உளவியல் நடவடிக்கை) நிறுவனம் ஒன்றே மகிந்தவை இவ்வாறு செவ்வி கொடுக்கும்படி ஆலோசனை வழங்கியிருந்ததாக பின்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

கடைசிவரையில்- அதாவது முள்ளிவாய்கால் சம்பவம்வரையில் புலம்பெயர் தமிழர்களது போராட்டங்கள் அனைத்தையும் புலிகளே நெறிப்படுத்தினார்கள் என்கின்ற மகிந்தவின் வாதத்திற்கு வலுச்சேர்ப்பது போலவே எங்களுடைய புலம்பெயர் தமிழ் ஊடகங்களும், பணியாளர்களும், செயற்பட்டார்கள்.

மகிந்த தலைமையிலான இராணுவத்தின் கொடுரச் செயல்கள் பற்றி புலம்பெயர் நாடுகளில் வெளிவந்த அனைத்து ஆதாரங்களுமே, செய்திகளுமே விடுதலைப் புலிகள் அமைப்பின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் என்ற மகிந்தவின் கூற்றை நிரூபிப்பது போலவே புலம்பெயர் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழ் ஊடகங்களும் செயற்பட்டன.

அதாவது உலகின் 32 நாடுகளில் பயங்கரவாதிகள் என்று கூறித் தடைசெய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக மேற்கொண்ட பிரச்சாரங்களே அவைகள் என்று உலகம் நினைக்கும் வகையில் நாம் நடந்துகொண்டுள்ளோம்.

(அந்தக் காலகட்டத்தில் உலகில் 32 நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கவாதிகள் என்று கூறி அந்த இயக்கத்தை தடை செய்திருந்ததால், புலிகளின் பிரச்சாரம் என்ற அடையாளத்துடன் வெளிவந்த பல விடயங்களை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.)

எங்களை உற்சாகப்படுத்துவதாக, எங்களுக்கு ஒரு கம்பீரத்தை வழங்குவதாக நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்ற பல விடயங்கள், உண்மையிலேயே எமக்கு எம்மையறியாமலேயே பின்னடைவை ஏற்படுத்துகின்ற சதிகள் என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒரு சிறிய உதாரணம் மாத்திரமே.

அண்மையில் மகிந்த ராசபக்சே மறுபடியும் பிரித்தானியா வந்த பொழுது இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தையும் இங்கு நாம் கவனத்தில் எடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அந்த நேரத்தில் இசைப்பிரியா என்கின்ற தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்காப் படைகளால் மிகவும் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. சண்டைகளின் பொழுது தம்மால் கொல்லப்பட்டவராக சிறிலங்கா இராணுவத் தலைமையால் உரிமை கோரப்பட்ட இசைப்பிரியா என்கின்ற ஊடகவியலாளர், உண்மையிலேயே சிறிலங்கா இராணுவத்தால் நிராயுதபாணியாகக் கைதுசெய்யப்பட்டு, மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஆதாரங்களை வெளியிட்ட பிரபல்யமான ஒரு சர்வதேச செய்தி தாபணம், சிறிலங்கா மேற்கொண்ட ஒரு மிகப் பெரிய போர் குற்றமாக அதனை அடையாளப்படுத்தியிருந்தது.

ஆனால் சர்வதேச ஊடகங்களில் இந்தச் செய்தி வெளிவந்த மறுதினம் எங்களுடைய புலம்பெயர் தமிழ் இணையத்தளங்கள் இசைப்பிரியா தொடர்பான ஒரு பரபரப்புச் செய்தியை வெளியட்டிருந்தார்கள். அதாவது,

இசைப்பிரியா சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் வீரனொருவனை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும், அதற்கு பழிதீர்க்க கொல்லப்பட்ட சிறிலங்கா வீரனின் சகாக்கள் ஒரு சதி செய்ததாகவும், தம்மிடம் சரணடைந்திருந்த சாதாரண பெண் ஒருவரை மிரட்டி காயம்பட்ட நிலையில் தவிப்பவர் போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த இசைப்பிரியாவை தந்திரமாகத் தமது எல்லைக்குள் வரவளைத்து, சற்றும் எதிர்பாராத முறையில் அவரை சிறிலங்காப் படைத்தரப்பு கைது செய்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவினால் கொல்லப்பட்ட சிறிலங்காப் படை வீரனின் நன்பர்கள் கோபத்தில் இசைப்பிரியாவைத் தாக்கி பழிவாங்கியதாக அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.

தமிழ் ஊடகங்கள் சில போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்ட இந்தச் செய்தியானது, சிறிலங்கா இராணுவத்தின் ஒரு மிகப் பெரிய மனித உரிமை மீறலுக்கான ஆதாரத்தை, ஒரு கொடுரமான போர்குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை சில நொடிகளிலேயே சுற்குநூறாக்கிவிட்டிருந்தது இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளர் அல்ல அவர் ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என்கின்ற ஒரு செய்தி தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளில் கூறப்பட்டிருந்தது.

அவர் ஒருவரை படுகொலை செய்தார் என்கின்ற ஒரு தகவலும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர் சிறிலங்காப் படைகளிடம் சரணடையவில்லை என்கின்ற ஒரு தகவலும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கின்றது.

அடுத்ததாக, சில இராணுவத்தினர் தமது நன்பன் கொல்லப்பட்டதால் உணர்ச்சிவசப்பட்டு செய்த ஒரு கொலையே அது என்ற நியாயப்பாட்டையும், எமது ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினுடாக நாம் வழங்கியிருந்தோம்.

அதாவது நிராயுதபாணியாக சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்த ஒரு ஊடகவியளாளரை, சிங்கள இராணுவம் கொடுரமாகப் படுகொலை செய்தது என்ற குற்றச்சாட்டை, தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி முற்றாகவே பலமிழக்கச் செய்திருந்தது. இத்தனைக்கும், இப்படியான தகவலை எதிரியின் ஊடகங்களோ., அல்லது நடுநிலையான சர்வதேச ஊடகங்களோ வெளியிடவில்லை.

முழுக்கமுழுக்க ஈழத் தமிழர்களால் நடாத்தப்படுகின்ற, தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை பெருமையுடன் கூறிக்கொள்கின்ற ஊடகங்களே இந்தத் தகவல்களை வெளியட்டிருந்தன.

எதிரி மிகவும் கவனமாக இதுபோன்ற தகவலை தமிழ் ஊடகங்களுக்கு கசிய விட்டிருந்தான். எமது ஊடகங்களுக்கும் இதுபோன்ற செய்திகள் மிகவும் கவர்ச்சிகரமாகவே தோன்றின.

இசைப்பிரியாவையும், அவரது வீரத்தையும், விடுதலைப் புலிகளின் பெருமையும் உயர்த்துவதாக நினைத்துத்தான் எம்மவர்கள் இந்தச் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளிட்டும் இருந்தார்கள். ‘நாமாவது சரணடைவதாவது..’ என்ற வெட்டி வீரத்துக்கு வலுச் சேர்ப்பதாக இருந்ததால்தான், அவர்கள் இந்தச் செய்தியை உற்சாகத்துடன் பிரசுரித்தும் இருந்தார்கள்.

ஆனால், தம்மை அறியாமலேயே எதிரியின் ஒரு மிகப் பெரிய உளவியல் போருக்கு எமது ஊடகங்கள் அந்தச் சந்தர்பத்தில் அனியாயமாகப் பலியாகிப் போயிருந்தன. தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவது என்பது எம்மைக் குறிவைத்து எதிரி இன்று மேற்கொண்டு வருகின் ஒரு முக்கியமான உளவியல் நடவடிக்கை.

இதற்கு நம்மை அறியாமலேயே நாம் அடிக்கடி பலியாகிவிடுகின்றோம் என்பதூன் சோகம். ‘விடுதலைப் புலிகள் திரள்கின்றார்கள்.. லட்சத் தீவுகளில் நான்காயிரம் பேர் இருக்கிரார்கள், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறிய புலிகள் வன்னிக்காட்டுக்குள் தாக்குதலுக்குத் தயாராக இருக்கின்றார்கள்.. இதோ வருகிறார்.. அதோ அடிவிழப் போகிறது…’

– எமது ஊடகங்களில் அடிக்கடி வெளிவருகின்ற இது போன்ற செய்திகள் எமக்கு உற்சாகம் அழிப்பதாக இருப்பது உண்மைதான். ஆனால் இந்தச் செய்திகள் எமக்கு தருகின்ற மகிழ்சியை விட எதிரிக்கு அளிக்கின்ற பலன் மிக மிக அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணரத் தவறிவிடுகின்றோம்.

இன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும், அவசரகாலச் சட்டத்தையும் தொடர்ந்து நீடித்துவைத்திருப்பதற்கும், சரணடைந்த போராளிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்கும், ஒரு இன அழிப்பை தொடர்ந்து மேற்கொள்வதற்கும், வன்னியில் ஒரு இலட்சம் படையினரை தொடர்ந்து தங்கவைப்பதற்கும், அவர்களது குடும்பங்களை வன்னியில் நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கும்.. இதுபோன்ற செய்திகள் எமது எதிரிக்கு மிகவும் பயன்படுகின்றன.

சற்று ஆராய்ந்து பார்த்தால் இதுபோன்ற செய்திகளை ஈழத் தமிழ் அமைப்புக்கள் எதுவுமே வெளியிட்டிருக்காது. சிறிலங்கா தரப்பில் இருந்தோ அல்லது "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் தரப்பில் இருந்தோதான் இதுபோன்ற செய்திகள் வெளியே கசியவிடப்பட்டிருக்கும்.

ஆனால் ஈழத் தமிழருக்கு இனிப்பான செய்திகள் போலவே இவை தெரிவதால், இந்தச் செய்திகள் ஈழத் தமிழ் ஊடகங்களில்தாம் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டிருக்கும்.

தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவதான இந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றி நாம்- குறிப்பாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எதிரிகளின் இந்த வகையான உளவியல் நடவடிக்கை தொடர்பாக பல உதாரணங்களை என்னால் காண்பிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னதாக மற்றொரு முக்கிய உளவியல் நடவடிக்கை பற்றி நாம் எமது பார்வையைச் செலுத்தியாகவேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் உளவியலை ஒருவித அச்ச நிலைக்குக் கொண்டு சென்று, அந்த அச்ச நிலையில் பலவிதமான தடுமாற்றங்களை அவர்களுக்கு ஏற்படுத்தி, ஒரு பலவீனமான, விரக்தியான மனநிலையில் அவர்களை வைத்திருக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படுகின்றதான உளவியல் நடவடிக்கைகள்.

இந்தவகையான உளவியல் நடவடிக்கைகள்தாம் எதிர்காலங்களில் உலகத் தமிழரைக்; குறிவைத்து மிகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட இருப்பதாக நம்பப்படுகின்றது. எனவே, இந்த வகை உளவியல் நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

பகுதி- 2 தொடரும்.. தொடர்ந்து இணைந்திருங்கள்

மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க… https://www.youtube.com/my_videos?o=U

www.fb.com/tamileelams

Thursday, October 3, 2013

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை.



தனக்கே ஆனா தன்னமலற்ற தனிப்பண்பால் தமிழர்களுக்கு விடுதலை வேண்டி ஓர் இயக்கத்தை உருவாக்கி போராளிகளுக்கு சிறந்த தலைவனாகி ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கும் சிறந்த தலைவனாக சிறந்த வழிகாட்டியாக இளம் தலைமுறையின் அண்ணனாக முதற்தலைமுறையின் தம்பியாக தமிழரின் தந்தையாக விளங்கும் தேசியத்தலைவரிடம் ஒருவர் முன்வைக்கும் சிலகேள்விகள்

நீ எப்படி தலைவன் ஆனாய்?-சேசுபாலன்

எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும். மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான்.

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை.

ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே!

எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.
இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்?

எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா?

ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.

இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும்நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?


சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!
அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்!

ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.


அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!


எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்!

கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.
இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய்.

தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்?

மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே?

ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!


எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும்.

இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.


ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை “மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.


ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!
வாழ்க நீ எம்மான்!

கிளர்ச்சியாளன்
வழக்கறிஞர் - சேசுபாலன்
மற்றும் குழுமம்.
“தாய்த் தமிழ்நாடு"

"இந்தி"(தீ)யன் ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

மாண்டவர் மீண்டும் பிறப்பது மதங்களின் நம்பிக்கை .... ஆண்டவன் மீண்டும் பிறப்பது அவதார நம்பிக்கை .... இறவாமலே ஏழு பிறப்பெடுப்பது பிரபாகரனின் வாடிக்கை



 

Monday, September 30, 2013

தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கிறார். ‘வன்னி குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்’



பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில்

தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கிறார்.பிரபாகரன் வாழ்க்கை வரலாறு இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.ஆக்சன் படங்களுக்கு‌ரிய விறுவிறுப்பும், திகில் படங்களுக்கு‌ரிய மர்மமும், மெலோ டிராமாக்களுக்கு‌ரிய சென்டிமெண்டும், செவ்வியல் படங்களுக்கு‌ரிய ச‌ரித்திரப் பின்னணியும், தியாகமும், வீரமும் நிறைந்தது தமி‌ழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை.

அந்த வாழ்க்கையின் சிறு துளியை‌த் திரையில் கொண்டு வந்தால்கூட அதுவொரு பிரமாண்ட பெருமைக்கு‌ரிய ஆக்கமாக இருக்கும்.அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான். பிரபாகரனின் தீரமிகு வாழ்க்கையை டெலி சீ‌ரியலாக தயா‌ரிக்கும் வேலையில் அவர் மும்முரமாக உள்ளார்.

இதற்காக நடிகர் பிரகாஷ்ராஜை சந்தித்து‌ப் பேசியுள்ளார். பிரபாகரனின் வேடத்தை ஏற்று நடிக்கும்படி இந்த சந்திப்பில் பிரகாஷ்ராஜை கேட்டுக் கொண்டதற்கு நேர்மறையான பதிலே சீமானுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது பிரபாகரனாக நடிக்க சம்மதம் தெ‌ரிவித்துள்ளார் பிரகாஷ்ரா‌ஜ்.

என் மகன் இருந்திருந்தால் பிரபாகரனையே அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டிருப்பேன்!! – பிரகாஷ்ராஜ்

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், ‘நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரனைத்தான் ஹீரோவாகக் கொண்டு வளர்ந்திருப்பேன். அவர் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…

“பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. அவர் என்ன சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா… தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்… தற்காப்புதான்.

அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்… கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர். அவர் கண்முன் நிகழ்ந்த இனவெறிக் கொடுமைகள்தான் அவரை, தன் மக்களின் விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்க வைத்திருக்கிறது.

அவர் வாழ்க்கையை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது. அவரைப் போன்ற நேர்மையான, எளிமையான, மன உறுதியும் வீரமும் கொண்ட தலைவர்களை நாம் பார்த்ததில்லை. இது வெறும் ஹீரோ வொர்ஷிப் இல்லை. இப்படிப்பட்ட மாவீரர்களை, தலைவர்களைப் போற்றாவிட்டால், நாம் மாபெரும் சரித்திர தவறு செய்தவர்களாவோம்.

கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன்தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் வீரத்தைப் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா ஒரு மாவீரன் எப்படி இருப்பார்னு பிரபாகரனைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டோம். அவரைப் பாத்துதான் நாம வளர்ந்தோம்.

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ‘இதோ பார்… இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல்’ என்று காட்டி வளர்த்திருப்பேன்…

பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.

‘வன்னி குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்’ என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது”, என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

-தமிழ்மாறன்

ஈழ தேசம் எங்கள் தேசம், சோழன் கரிகாலன் ஆண்ட தேசம்



தலைவரை வெளியேற்றிய விசேட படையணி

முள்ளிவாய்கால் களமுனை இன்னும்பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டதாக பலர் நினைத்து வந்தாலும்அங்கு நிகழ்ந்தேறியவை இன்றும் விடைகாணமுடியா மர்மங்களாகவே நீடித்துவருகின்றது. அந்தமர்மங்களிற்கு ஓரளவு விடையளிப்பதாகவே இந்த தகவல் அமைந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் சண்டை மிகப்பெரும் வரலாற்றுச் சோகத்துடன்நிறைவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் களமுனைக்கு விசேடபடைப்பிரிவு ஒன்று வந்திருந்ததாகவும் அவரகள் அதிநவீன ஆயுதங்களுடன்காணப்பட்டதாகவும் அவர்களை நேரிடையாக களத்தில் கண்ட முக்கய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். விசேட படைப்பிரிவில் வந்திருந்தவர்களது கையில் அதிநவீன ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர்கள் திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்டிருந்ததாகவும்தமிழில் பேசிவந்ததாகவும் தான் சந்தித்த ஆச்சரியம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர்களது வருகை பற்றியோ அல்லது அவர்கள் பற்றியோ விடுதலைப் புலிகளின்முக்கிய தளபதிகளிற்கே தெரியாமல் இருந்ததாக கூறும் அவர் தலைவரின் நேரடித் தொடர்பில் இருந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறினார். சுமார் இருநூறிற்கும் அதிகமானவர்களை கொண்டிருந்த இந்த விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில்தான் தலைவரது பாதுகாப்பு ஏற்பாடுகள்இருந்துள்ளது. இவர்கள் எதிர்கொண்ட களத்தில் சிங்களப்படை பெரும் இழப்புகளைச் சந்தித்ததை நேரடியாக பார்த்ததாக அவர் கூறினார். தலைவரது நேரடித் தொடர்பில் வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகளே இறுதிக்கட்டத்தில் தலைவரது பாதுகாப்பிற்கு வரவழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரகளது ஏற்பாட்டில் தலைவர் பாதுகாப்பாக வெளியேறி இருக்கலாம் எனவும் தான் கருதுவதாக அவர் தெரிவித்தார். இருநூறிற்கும் அதிகமான விசேட படையணிப் போராளிகள் வெளியில்இருந்து இறுக்கமான களச்சூழல்களை ஊடறுத்து களத்திற்கு செல்லமுடிந்துள்ளதென்றால் அந்த வழியில் தலைவர் உள்ளிட்டவர்கள் வெளியேறிச்சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. சண்டைக்களம் மிக மோசமான இழப்புகளுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கையில் அந்த இக்கட்டான வேளையில் கூட களமுனை தலைவரது கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது என்பதை இந்த விசேடபடையணியின் உள்நுழைவும் வெளியேற்றமும் சுட்டிக்காட்டுகின்றது. விரைவில் மர்மங்கள் விடுபட்டு விடுதலை ஒளி பிரகாசிக்கும் சாத்தியங்கள்தென்படுகின்றது. நம்பிக்கையுடன் களமாடுங்கள் தமிழர்களே வெற்றி நிச்சயம்.உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்கள் உங்கள் உங்கள் தளங்களில் முழுமூச்சுடன்விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். நாமெல்லாம் எதிர்பார்க்கும் அதிசயம் இந்த உலகில் நிகழும் காலம்வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவிக்க முடியும்.

-விடுதலை அடங்கா தமிழன்

இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்! இருப்பாய் தமிழா நெருப்பாய்!




குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!


கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்! - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? - புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!
-புவிநன்

Saturday, September 28, 2013

இங்குள்ள தேசியக்கட்சிகளில் பிற மொழியினர் தலைமை தாங்க என்ன உரிமை இருக்கிறது? - In der anderen Sprache, an der Spitze der Nationalen was ist hier richtig?

Image

தேசியக்கட்சிகளின் தலைமைப் பொறுப்புகளை, அதாவது தமிழ்நாட்டின் பிரச்சினைகளில் முடிவு எடுக்கும் அதிகாரதைப் பெற தமிழர்கள் அக் கட்சிகளின் தலைமைப் பொறுப்புகளைக் கைப்பற்றவேண்டும். இங்குள்ள தேசியக்கட்சிகளில் பிற மொழியினர் தலைமை தாங்க என்ன உரிமை இருக்கிறது அதற்காகத்தானே மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.தெலுங்கர்களுக்

கும்,கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும் தமிழ்நாட்டில் தலைமை ஏற்க எந்த உரிமையும் இல்லை.அவர்கள் மாநிலங்களில் எங்காவது தமிழன் தலமை ஏற்றிருக்கிறார்களா?...இல்லையே..பின் ஏன் தமிழர்கள் நாம் அவர்களைத் தலைவர்களாக ஏற்கவேண்டும்.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

Nationale Führungsaufgaben, wie die Macht, auf Fragen der Tamil Nadu Tamilen kaipparraventum Führungsverantwortung der Parteien zu entscheiden. Was ist hier genau richtig, um die nationale atarkakattane in der anderen Sprache und sprachliche manilankalakap Kopf Malayalam und Tamil Nadu haben kein Recht auf die Führung übernehmen. Stocken geraten Sie das Verfahren, wie sie irgendwo in den Staaten sind? ..... Und warum sind wir nicht als Führer, wir müssen sie akzeptieren.

-முகிலினி/Mukilini

Friday, September 27, 2013

தேசிய தலைவரின் பல வடிவங்கள் - Verschiedene Formen der nationalen Führer



Различные формы национального лидера

Pelbagai bentuk pemimpin negara

Format e ndryshme të udhëheqësit të kombëtare

Varie forme di leader nazionale

Foirmeacha éagsúla de cheannaire náisiúnta

Erilaiset kansallinen johtaja

Διάφορες μορφές του εθνικού ηγέτη

أشكال مختلفة من زعيم وطني

Diversaj formoj de nacia ĉefo

Různé formy vůdce národa

Разни облици националног лидера

各种形式的国家领导人

Forskellige former for national leder

Ulusal lider çeşitli şekillerde

Ulike former for nasjonal leder

Iba't ibang mga paraan ng pambansang lider

Diferite forme de lider național

Varias ducem nationale

Các hình thức khác nhau của lãnh đạo quốc gia

国家指導者の様々な形

სხვადასხვა მიმართულებები ეროვნული ლიდერის

Varias formas de líder nacional

Rôzne formy vodcu národa

Različne oblike nacionalnega vodjo

Különböző formái nemzeti vezető

Ntau cov ntaub ntawv ntawm teb chaws thawj coj

Aina mbalimbali ya kiongozi wa kitaifa

צורות שונות של מנהיג הלאומי

Ntau cov ntaub ntawv ntawm teb chaws thawj coj

Verschiedene Formen der nationalen Führer

-புவிநன்/ Puvinan

கண்ணிவெடியில் கால்போகும் உயிர்போகும் என்று--களமுனையில் புலிவீரன் நினைத்திருந்தால்.. In Minen kalpokum Das ist tot - in kalamunai Wenn Sie wollten puliviran ..



எதை எழுத நினைத்தாலும்.அதை
எழுதமுன் என் கண்ணில் நிற்பது..
என்னினிய மண்ணும் மக்களும்..மாவீரர்களுமே..
வதை வதையாய்க் கட்டி வைத்திருக்கும்
வண்டுகளுக்கு மட்டுமே தெரியும்..
வண்ண மலர்களில் தேன்தேடி அலைந்த
வலி..எப்படி என்று!

கண்ணிவெடியில் கால்போகும்
உயிர்போகும் என்று--களமுனையில்
புலிவீரன் நினைத்திருந்தால்..
தமிழ் மண்ணைச் சூழ்ந்திருந்த
மதயானைக் கூட்டத்து முகாம்கள்
இதமாக எம்கையில் வந்திருக்காது..
மக்களின் துன்பமும் துயரமும்
மறைந்திருக்காது..!

இழப்புக்களைக் கணக்குப் பார்த்து
எப்போதும் புலிவீரன் களமுனைக்குள்
கால் வைக்கமாட்டான்..
குலை குலையாய் புலித் தலைகள்
கண்முன்னே விழுந்தாலும்
மழை மழையாய் குண்டுகளை
பொழிந்துகொண்டே முன்செல்வான் !

அழிவுகளை எண்ணிப் பார்த்து
போராட வந்திருந்தால்..
அணுவளவு நிலம்கூட
எதிரியிடம் இருந்து மீண்டிருக்காது..
அழிந்தது போதும்..இனியாவது
ஆறுதல் காண்போம் வா..என்பது
அற்புதமான வார்த்தைதான்..
ஆனால்..நடைமுறைக்கு வருமா?

எழுந்தால் சிங்கள ராணுவம்..
படுத்தால் புத்த விகாரைகள்..
எப்படிநாம் ஆறுதல் அடையமுடியும்?
விழுந்தோம் என்பது உண்மைதான்.ஆனால்
அதைவிட வேகமாய் மீண்டும்
எழுவோம் என்பது
உண்மையிலும் உண்மை..இருந்துபார்!

-மு.வே.யோகேசுவரன்

Ich wollte , es zu schreiben .
Elutamun stand in meinem Auge ..
Mavirarkalume enniniya Sand .. Leute ..
Halten die Auswirkungen auf Tumor vataiyay
Käfer kennt ..
Tenteti schwankte in Farbe Blumen
Wie schmerzhaft, dass ..!

In Minen kalpokum
Das ist tot - in kalamunai
Wenn Sie wollten puliviran ..
Tamilisch Boden rund um das
Camps matayanai Sitzung
Emkai müssen angenehm sein ..
Die Menschen leiden des Sturms
Maraintirukkatu ..!

Konto von Verlusten
Immer puliviran kalamunaikkul
Wird nicht nennen ..
Tiger köpft Verletzung kulaiyay
Herbst Anblick
Regen regen Kugeln
Muncelvan polintukonte !

Zähler Katastrophe Pflege
Wenn Sie zu kämpfen haben ..
Anuvalavu nilamkuta
Mintirukkatu vom Feind ..
Zerstörte zumindest genug ..
Kommen Sie Trost finden ..
Wunderbare Begriff ..
Aber .. wenn Sie üben möchten ?

Singhalesischen Armee bis ..
Vikaraikal der Buddha liegend ..
Eppatinam Trost finden ?
Es ist wahr, dass Herbst. Aber
Schneller als re -
Die Jungs
Iruntupar Wahrheit .. die Wahrheit!

-புவிநன்

Friday, September 20, 2013

அடிப்படை மனிதாபிமானமே பொதுவுடைமை. மனிதநேயத்தையும் தாண்டி உயிர் நேயம் என்ற கொள்கையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று நினைத்து பெருமை மட்டுமே கொள்ள முடிகிறது

படம்

பார்வையற்ற மாற்றுத்திரனாலி மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. அரசு கல்லூரிகளை தொடங்கிக்கொண்டே போகிறது. ஆனால் படிப்பவர்களுக்கு வேலையளிப்பதில்லை. அவர்களை வீதிக்கு வந்து போராட வைத்ததே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் அவர்களை கையாண்ட விதம் சட்டம் எளியவர்கள் மீது மட்டும் கடுமையாகவும், நேர்மையாகவும் பாயும் என்பதை உணர்த்துகிறது.



அவர்களை இரவில் சுடுகாட்டில் விட்டுச்சென்றது இவர்களும் மனித இனத்தை சேர்ந்தவர்கள் தானா என்ற ஐயத்தை ஏற்ப்படுத்துகிறது?



ஆங்கிலத்தில் "A FOR APPLE", "B FOR BALL" என்று கற்ப்பதயே விரும்பும் நம்மின மக்களுக்கு எப்படி மனிதநேயம் இருக்கும்.

தமிழ் "அறம் செய்ய விரும்பு"; "ஆறுவது சினம்" என்று ஒவ்வொரு எழுத்திற்கும் அறத்தை போதித்தது தமிழினம். அதை தூக்கிஎறிந்துவிட்டு ஆங்கில மோகத்தில் திறியும் அற்ப பதர்கள் அப்படி தான் இருக்கும்.

இச்செயலை செய்தவர்களையாவது அரசு கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவிநள்

அனைவருக்கும் ஒரே நீதிதான், யார் தப்பு செய்தாலும் தண்டனை ஒன்றுதான் !



திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப்பாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டுப் பகுதியினுள் அயல் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழிதவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைப்பாடு செய்தாள். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள்.

அத்துடன் அச்சிங்களப் பெண்மணியும் அவனை அடையாளங்காட்டி விட்டார். அவ்வாலிபன் எமது இயக்கத்தினுடைய தீவிர உதவியாளனும், அங்கு பெரும்பாலான காட்டுப் பிரதேசங்களுக்கான வழிகாட்டியுமாவான். அவ்வேளை அச்சிங்களப் பெண்மணியானவள் அங்குள்ள தமிழ்ப் பெண்கள் சிலரின் உதவியுடன் அங்கு அமைந்துள்ள சிறிய வைத்தியசாலை ஒன்றிற்கு வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.

இச்செய்தியை மூதூர் பிரதேசப் பொறுப்பாளர் தேசியத் தலைவர் அவர்களுக்கு விரிவாக அறிவித்து என்ன செய்வதென்று கேட்டார். அத்துடன் அச்சிங்களப் பெண்மணியைக் வல்லுறவுக்கு உட்படுத்திய வாலிபன், அச்சிங்களப் பெண்மணியானவள் முன்பு தமிழர்கள் வாழ்ந்த அதே கிராமத்தில் தமிழர்களைத் துரத்தியடித்து விட்டு குடியேற்றப்பட்டவள் என்றும் அதே சிங்களக் குடியேற்றத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் எமது தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் அதனால்தான் தான் அந்தச் சிங்களப் பெண்மணியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நியாயப் படுத்தியும் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அத்தமிழ் வாலிபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குச் செய்த பங்களிப்புக்களையும், அவன் இல்லாது விட்டால் அங்குள்ள பெரியதொரு காட்டுப் பிரதேசத்திற்கு வழிகாட்டி இல்லை என்பதையும் அந்தப் பொறுப்பாளர் அறிவித்திருந்தார்.

அதற்குத் தேசியத் தலைவர் அவர்கள் உறுதியாக ‘அனைவருக்கும் ஒரே நீதிதான்’ என்றும் அச்சிங்களப் பெண்மணியை அவரது சொந்தக் கிராமத்திற்கு அனுப்புவதற்கு முன்பு அப்பெண் அறியக்கூடியதாக அவ்விளைஞனுக்கு மரண தண்டனை வழங்கும் படியும் அதன் பின்பு அப்பெண்ணைப் பாதுகாப்பாக அவரது சொந்தக் கிராமத்திற்கு அனுப்பும்படியும் அறிவித்திருந்தார். மறுநாள் தண்டனை நிறைவேற்றப்பட்ட விடயமும், சிங்களப் பெண் பாதுகாப்பாக அவரது கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட விபரமும் பிரதேசப் பொறுப்பாளரால் தேசியத் தலைவர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைப் படித்த தேசியத் தலைவர் அவர்கள் அங்கிருந்த தளபதிகளுக்குக் காட்டிவிட்டு, அனைவருக்கும் ஒரே நீதிதான் என்று உறுதியாகக் கூறினார்.

-ராவணன் தமிழன்

Tuesday, September 17, 2013

தமிழ் மொழியின் உரிமை காக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் குதித்துள்ள இந்த வீரத் தமிழர்களை வாழ்த்துவோம்.

படம்

தமிழ் மொழியை நீதிமன்ற வழக்காடு மொழியாக்கவும், மெட்ராஸ் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றவும் தொடர்ந்து இரண்டாம் நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் சென்னையில் மூன்று தமிழர்களும் , மதுரையில் ஐந்து தமிழர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை இவர்கள் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. கைதானாலும் சிறைக்கு உள்ளும் தாங்கள் உண்ணாமல் போராட்டம் செய்வோம் என்று அறிவித்துள்ளனர் இந்த வழக்கறிஞர்கள். தமிழ் மொழியின் உரிமை காக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் குதித்துள்ள இந்த வீரத் தமிழர்களை வாழ்த்துவோம்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அங்கயற்கண்ணி, வேல்முருகன் , பகத் சிங் ஆகியோர்கள் சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு தமிழர்களாகிய அனைவரும் ஆதரவு தெரிவிப்போம். அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் நேரில் சென்றும் நம் ஆதரவை தெரிவிப்போம். அலைபேசி எண்கள் : 9884380922, 9443917588

-இளையவேந்தன்