Showing posts with label அறம். Show all posts
Showing posts with label அறம். Show all posts

Thursday, October 17, 2013

தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்



"இந்தி"(தீ)ய ஒன்றியத்தில்  உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,

தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத....

முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...

தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....

அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்...

-இமயவரம்பன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

Wednesday, October 16, 2013

அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய எம்.சி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.


நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற எம்.சி.இராமச்சந்திரன் அவர்களைப் பாராட்டுகிறேன்.
நான் எம்.சி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .

நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.சி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.

இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.சி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.

அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.சி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.

நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.சி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

எம்.சி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.சி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.

ஆனால் நண்பர் இராமச்சந்திரன் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.


அப்படியில்லாது நண்பர் இராமச்சந்திரன் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.

ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன்.

-அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)




"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com            

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

Friday, October 11, 2013

நேற்று உண்ணாவிரதம் தொடங்கிய மதுரையை சேர்ந்த மூன்று மாணவர்கள் நேற்று இரவு 12:30 மணி அளவில் காவல் துறையினரால் வலுகட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சேர்க்க பட்டனர்....



அனால் தோழர்கள் அங்கேயும் உறுதியாக தங்களது உண்ணாநிலை போராட்டத்தை 2வது நாளாக தொடர்கின்றனர்.....
தமிழினமே அதரவு கொடு.....
தமிழக மாணவர்களே போராட வாருங்கள்.....
தனித் தமிழீழமே ஒரே தீர்வு.....

Monday, September 30, 2013

இன்று சர்வதேச முதியோர் தினம்



முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஆனாலும் எல்லோரும் அதை தொட்டுத்தான் ஆக வேண்டும்....
நாம் எப்படியோ அப்படித்தான் நம்முடைய வாரிசுகள் நம்மை அணுகும்...

அதை மனதில் வைத்தாவது அவர்களுக்கு ஆதரவு கொடுத்து காப்பாற்ற வேண்டும்......இன்று இவர்கள்...நாளை நாம்

-அன்பரசன்

Thursday, September 19, 2013

மண் குறும்படம் - மண் குறும்படம். "மண் என் மனதை தொட்டது "; உங்களை இக்குறும்படம் அழவைக்கவில்லையெனில் வேறு எதுவும் உங்களை அழ வைக்காது

மண் குறும்படம். "மண் என் மனதை தொட்டது "; உங்களை இக்குறும்படம் அழவைக்கவில்லையெனில் வேறு எதுவும் உங்களை அழ வைக்காது



"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" குரள் ௧௦௩௩ (1033); வேளாண்மை: ஒரு விளக்கம்

// உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் ////

954816_637653886265172_940875666_n

நன்றி@ ம.பொன்ராஜ் காலாடி

வேளாண்மை: ஒரு விளக்கம்
==============
* வேளாண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'விவசாயம்' என்று நிறைய பேர் நினைத்து இருப்பீர்கள். அது பின்னால் வந்த வழக்காறு. ஆனால், வேளாண்மை'யின் அர்த்தம் இது தான்.

> ஈகை,பரிவு,உபகாரம்,கொடைத்தன்மை,கொடுத்தல்,வள்ளல் தன்மை.
எனவே வேளாண்மை என்றால் 'கொடுத்தல்' என்று அர்த்தம்.

* யார் எதை கொடுத்தார்கள்? அன்று முதல் இன்றும் பல இடங்களில் பண்டமாற்று முறையில் அடிபப்டை பொருள் 'நெல்' போன்ற தானியங்கள் தான். அந்த நெல்லை உற்பத்தி செய்து, அதை பண்டம் மாற்றியும், கொடுத்தும், அந்த நெல் உறுபத்தி செய்த நிலங்களையும் கொடுத்தும் வாழ்ந்தவர்களுக்கு, பிற்காலத்தில் 'வேளாளர்' என்று அழைக்கப்பட்டனர். அதாவது 'கொடுப்பவர்கள்' என்று அர்த்தம். இந்த வேளாளர் என்பது இன்று சொல்லப்படுவது போல சாதி அல்ல. அது ஒரு 'பட்டம்'.

* தமிழில் ஆகு பெயர் என்பது போல, கொடுத்தல் என்பது திரிந்து விவசாயம் என்ற அர்த்தம் அதை செய்பவர்களின் தொழிலை குறிக்க மாறியது.

* பின்பு 'வேள்' என்ற சொல், மண்ணை குறிக்க தொடங்கியது.
வேள் - மண்
வேள் + ஆர் - வேளார் (மண்பாண்டம் செய்பவர்)
வேள் + ஆண்மை - வேளாண்மை (மண்ணை ஆளுதல்)
வேள் + இர் - வேளிர் (குறுநில மன்னர்கள், கடையேழு வள்ளல்கள்)

* சேர,சோழ,பாண்டியன் இவர்களுக்கு உள்ள பட்டங்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் பெருமை பொங்க சொல்லிக் கொள்ள இருந்தாலும், முன்னாள் முதல்வர் திரு.கருணாந்தி அவர்கள், தனது தெலுங்கு சாதியான 'சின்ன மேளம்' என்பதை 'இசை வேளாளர்' என்றே மாற்றியதில் இருந்து, 'வேளாளர்' என்ற வார்த்தையின் அர்த்தத்தை அவர் எந்த அளவில் உணர்ந்து உள்ளார் என்பது திண்ணம்.

ஆக, உலகின் எந்த நாகரிகத்தை எடுத்துக் கொண்டாலும், அரசு தோற்றம் என்ற ஒன்றின் அடிப்படை 'வேளாண்மை'யாகத் தான் இருக்க முடியும்.

-தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்