Showing posts with label தமிழர் வரலாறு. Show all posts
Showing posts with label தமிழர் வரலாறு. Show all posts

Tuesday, October 8, 2013

தமிழரின் வியத்தகு மாண்புகள்



"கால வாய்ப்பாடு - தெறிப்பளவு"

*2 கண்ணிமை - 1 நொடி.

*2 கைநொடி - 1 மாத்திரை.

*2 மாத்திரை - 1 குரு.

*2 குரு - 1 உயிர்.

*2 உயிர் - 1 சணிகம்.

*12 சணிகம் - 1 விநாடி.

*60 விநாடி - 1 நாழிகை.

*2 1/2 நாழிகை - 1 ஓரை.

*3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்.

*2 முகூர்த்தம் - 1 சாமம்.

*4 சாமம் - 1 பொழுது.

*2 பொழுது - 1 நாள்.

*15 நாள் - 1 பக்கம்.

*2 பக்கம்(30 நாள்) - 1 மாதம்.

*6 மாதம் - 1 அயனம்.

*2 அயனம்(12 மாதம்) - 1 ஆண்டு.

*6 ஆண்டு - 1 வட்டம்.

-இனியா

Sunday, September 29, 2013

"இழந்த பெருமை மீட்டெடுக்க எழுந்து வருவோம் பொறுத்திரு! எம் சீற்றம் காணக்காத்திரு!!!!!"

தமிழர்களின் வரலாற்றை உணராதவன் தமிழனாக இருக்க முடியாது - Es kann nicht unaratavan Geschichte sein. நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழினத்தின் வரலாற்றை ஒரு வரியில் கூறுகிரேன்:

வந்தவரை எல்லாம் வாழ வைத்தோம், ஆளவும் வைத்தோம் - எம் சொந்தவரை சாகவைத்தோம்; 

கள் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளெடுத்து தோல்நிமிர்த்தி முன்தோன்றிய தமிழன் என்ற மூத்தகுடி இனம் செய்யாத ஒன்றேயொன்று பிற இனங்களையோ மக்களையோ மற்ற தேசிய இனங்களை போல் சென்று கொன்றுகுவித்து ஆக்கிரமிக்கவில்லை!!!

படற ஒரு கொம்பிள்ளது  பறிதவித கொடிகளுக்கு இறக்கப்பட்டு தேரினை பரிசளித்த பாரியின் பரம்பரை இன்று வாழ ஒரு குடுசை கூட இல்லாமல் அம்மனமாய் இறந்தது.
"கோட்டை வாசல் கோபுரங்கள் தந்த மக்கள் செங்கரங்கள் கம்பி வலைக்கு பின்னே  கட்டப்பட்டு கதறுது"

"இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு யார் தான் நீதியல்லிப்பது?"

"நீதி  கிடைத்து என்ன பயன்? ! இழந்த உயிர்கள் திரும்புமோ, இழந்த தேசம் கிடைக்குமோ ?"

"இழந்த பெருமை மீட்டெடுக்க எழுந்து வருவோம் பொறுத்திரு! எம் சீற்றம் காணக்காத்திரு!!!!!"

-

இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும்"???? - Seeman speech Vote for ADMK - 6 May 2009; ஈழம் மலர்வதற்க்குமுன் தமிழகத்திலுள்ள ௧௧௮ (118) ஏதிலிகளின் முகாம்கள் தகர்த்தெறியப் படட்டும்??? இறந்த மீனவர்களுக்கும், மாணவர்களுக்கும் நீதி கிடைக்கட்டும்?? பெற்றுத் தருமா நாம் திராவிடர் கட்சி??

அரசியல் வலிமையே அடிப்படை தேவை!!! தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும்!!! ஓட்டுப் பொறுக்கிகளை நம்ப வேண்டாம்!!!!!
http://www.youtube.com/watch?v=XRd6t9yjeUU

Tuesday, September 17, 2013

தமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் குப்பையில்!

வெல்லும் வரை செல்வோம்படம்

தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது .

இங்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

1627 அச்சிடப்பட்ட பழமையான் அச்சு புத்தகம் இங்கு பாதுகாக்கப் பட்டுவருகிறது .

தமிழர் நாட்டில் உள்ள பண்டைய ஓலை சுவடிகளில் 50 மட்டுமே இது வரை படித்து அறியப்பட்டுள்ளன.

அதற்குள் அடங்கியவை தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூற, புறநானூறு, பதிற்று பத்து, எட்டு தொகை, நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு சீவக சிந்தாமணி, பரி பாடல் போன்றவை.

இதில் சில இலக்கியங்களின் செழுமையும் தொன்மையையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.

மூன்று லட்சம் ஓலை சுவடிகளையும் படித்தறிந்தால் தமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும் பற்றி நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

உலகில் தோன்றிய மொழிகளில், மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழினம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலை சுவடிகள் உதவும்.

செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கியங்களை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு

-தமிழ் ஆதவன்